சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை,
சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், படப்பை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் மாநில போலீசார் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முன்னா என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story