நீலகிரி: 'வீட்டு மனைகளுக்கு முறையான அனுமதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்' - மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்


நீலகிரி: வீட்டு மனைகளுக்கு முறையான அனுமதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் - மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
x

விதிகளை மீறி வரைப்படம் தயாரிக்கும் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான கட்டிட குழு கூட்டத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட 1,207 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

மேலும் நீலகிரியில் வீட்டு மனைகள் வாங்குவதற்கு முன்னர் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள கலெக்டர் அம்ரித், விதிகளை மீறி வரைப்படம் தயாரிக்கும் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story