அதிமுக தலைமை அலுவலக மோதல் வழக்கு - "ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது" - கோர்ட்டு அதிரடி உத்தரவு


அதிமுக தலைமை அலுவலக மோதல் வழக்கு - ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது - கோர்ட்டு அதிரடி உத்தரவு
x

அதிமுக மாவட்ட செயலாளர்கள், ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

காவல்துறை பதிலளிக்கும் வரை அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்கள் உள்பட 11 பேரை கைது செய்யக்கூடாது என்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் ஆதிராஜாராம், விருகை ரவி, அசோக் உட்பட 11 பேர் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு அன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

1 More update

Next Story