இந்தியா பெயரை யாராலும் மாற்ற முடியாது - திமுக எம்.பி. திருச்சி சிவா


இந்தியா பெயரை யாராலும் மாற்ற முடியாது - திமுக எம்.பி. திருச்சி சிவா
x

கோப்புப்படம் 

இந்தியா என்ற பெயரை யாராலும் மாற்ற முடியாது என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.

சென்னை,

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியா என்ற பெயரை யாராலும் மாற்ற முடியாது. இந்தியா என்ற பெயரை கண்டு பயப்படுகிறார்கள். இந்தியா என்பது தேசத்தின் பெயர் மட்டுமல்ல. அது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒன்று. அதன் பெயரை யாராலும் மாற்ற முடியாது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டதற்கு பாஜக பயந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story