ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரம்: கவர்னர் மீது வீண் பழி சுமத்தவில்லை - அமைச்சர் ரகுபதி பேட்டி
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து ஒழுங்குமுறைப்படுத்தும் வகையில் ஆன்லைன் ரம்மி சட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் மீது வீண் பழி சுமத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோருவதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story