அ.தி.மு.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை - செல்வப்பெருந்தகை பேட்டி


அ.தி.மு.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை - செல்வப்பெருந்தகை பேட்டி
x

தி.மு.க.வுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை மார்ச் 6-ந்தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு எஸ்.பி.ஐ. வங்கி ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம் கேட்டுள்ளது. தேர்தல் பத்திர பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டியதுதானே என்று சாமானிய மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

தி.மு.க.வுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. தொகுதி பங்கீட்டிற்கு இப்போது என்ன அவசரம் வந்தது. தேர்தல் அறிவிப்பு இன்னும் வரவில்லை. மாநில கட்சிகளுடன் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. மாநில கட்சிகள் முடிந்த பிறகுதான் தேசிய கட்சியான நாங்கள் முடிவுக்கு வருவோம். ஒவ்வொரு மாநிலமாக ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழகத்திலும் ஒப்பந்தம் போடப்படும். விரைவில் நல்ல முடிவு வரும். இனிப்பான செய்தியை விரைவில் சொல்வோம் என்றார்.

எங்கள் கட்சியினர் யாரும் அ.தி.மு.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார்.


Next Story