கடலூரில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அம்மா உணவகத்திற்கு நோட்டீஸ்


கடலூரில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அம்மா உணவகத்திற்கு நோட்டீஸ்
x

மாநகராட்சிக்கு விளக்கமளிக்காவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் உழவர் சந்தையில் இரண்டு அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அம்மா உணவகங்களிலும் 16 பெண் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அனைவரையும் பணி நீக்கம் செய்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வழக்கம் போல பணிக்கு வந்து உணவகத்தில் சமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டு அம்மா உணவகத்திலும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன.

அதில் காலையில் சமைத்த உணவை மதியம் வழங்கியதாகவும், 2018-ம் ஆண்டு வரை ஒவ்வொரு அம்மா உணவகமும் மாநகராட்சி கருவூலத்தில் ரூ.3,600 செலுத்தி வந்த நிலையில், தற்போது வெறும் ரூ.1,000 மட்டுமே செலுத்தி மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், இது குறித்து விளக்கமளிக்காவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story