கிளாம்பாக்கத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு


கிளாம்பாக்கத்தில் பஸ்களுக்கான  நடைமேடை எண்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Jan 2024 4:14 AM GMT (Updated: 30 Jan 2024 4:50 AM GMT)

சென்னைக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு வசதியாகவும் கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் முனையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

சென்னை,

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பஸ்கள் இயக்கப்படாது என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையத்தில் எந்த நடைமேடையிலிருந்து எந்த ஊருக்கு அரசு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி,

நடைமேடை 1 மற்றும் 2ல் - திருநெல்வேலி, கன்னியாகுமரி, குட்டம், குலசேகரம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

நடைமேடை 3ல் - காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் புறப்படும்.

நடைமேடை 4 மற்றும் 5ல் - குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல்

நடைமேடை 6ல் - குருவாயூர், கோவை, சேலம்

நடைமேடை 7ல் - செஞ்சி, செங்கம்

நடைமேடை 8ல் - சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலூர்

நடைமேடை 9ல் - திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.ஈ.டி.சி.பஸ்களுக்கு நடைமேடை ஒன்று முதல் 6 வரை 66 வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.என்.எஸ்.டி.சி.பஸ்களுக்கு நடைமேடை 7 முதல் 10 வரை 44 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story