கண்களில் கருப்பு துணி கட்டி நர்சுகள் ஆர்ப்பாட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி நர்சுகள் ஆர்ப்பாட்டம்
x

கண்களில் கருப்பு துணி கட்டி நர்சுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக நர்சுகளை பணி பாதுகாப்பு மற்றும் தொகுப்பூதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று 10-ம் நாளாக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது வாழ்க்கையே இருட்டாகி வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காக கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.


Next Story