ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்...!
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்.
சென்னை,
புற்றுநோய் டாக்டரான மைத்ரேயன் 1999ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்தார்.பின்னர் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவளித்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து உள்ளார்.டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்.
Related Tags :
Next Story