கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்பது தவறு - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்பது தவறு - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
x
தினத்தந்தி 25 Jan 2024 4:05 AM GMT (Updated: 25 Jan 2024 4:26 AM GMT)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்காக 5 நடைமேடைகள் உள்ளன. இதில், 77 பேருந்துகளை நிறுத்த முடியும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன.

இதனிடையே, ஆம்னி பஸ்கள் 24-ந்தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஆம்னி பஸ்கள் ஏற்றிச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன், ஆம்னி பஸ்களையும், பயணிகளையும் கிளாம்பாக்கத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் ஆம்னி பஸ் ஓட்டுநர்களும், பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அத்துடன், தென் மாவட்டங்களில் இருந்து இன்று சென்னை வந்த ஆம்னி பஸ்களும் கோயம்பேடு செல்லாமல் கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இறக்கி விடுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக பயணிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்;

"பொங்கல் முடிந்தவுடன் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகளை இயக்குவோம் என்றார்கள். கோயம்பேட்டில் 1000 பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளதா? நாங்கள் கோயம்பேட்டிலிருந்து தான் இயக்குவோம் என்றால் என்ன அர்த்தம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்பது தவறு. ஆம்னி பேருந்துகளுக்காக 5 நடைமேடைகள் உள்ளது. 77 பேருந்துகளை நிறுத்த முடியும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய வசதிகள் உள்ளன. ஏற்கனவே திட்டமிட்டப்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்." என்றார்.


Next Story