அண்ணா பிறந்தநாளையொட்டி 27 சிறை கைதிகள் முன்கூட்டியே விடுதலை


அண்ணா பிறந்தநாளையொட்டி 27 சிறை கைதிகள் முன்கூட்டியே விடுதலை
x

கோப்புப்படம்

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மனிதாபிமான அடிப்படையில் சில கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது.

சென்னை,

75-வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதையொட்டி, அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி (15.9.23) மனிதாபிமான அடிப்படையில் சில கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. அதன்படி தமிழகத்தில் சிறைகளில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளில் விடுதலை செய்வதற்கு தகுதியானவர்களை (நன்னடத்தை உள்ளிட்டவற்றின் அடிப்படையில்) அடையாளம் காண விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

அந்தவகையில் புழல் சிறையில் 3 பேர், வேலூரில் 7 பேர், சேலம், கோவையில் தலா 4 பேர், கடலூர், மதுரை, பாளையங்கோட்டை, புழல் பெண்கள் சிறையில் தலா 2 பேர், வேலூர் பெண்கள் சிறையில் ஒருவர் என மொத்தம் 3 பெண்கள் உள்பட 27 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


Next Story