ஓணம் பண்டிகை: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஓணம் பண்டிகையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 29ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
"கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29-8-2023 செவ்வாய் கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
29-8-2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, 2023 செப்டம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23-9-2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 (under negotiable instruments act 1881)-ன்படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 29-8-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.