சேலம்: காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலி


சேலம்: காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலி
x

காவல் நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை எரித்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் சங்ககிரி ஜி-1 காவல்நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்து சிதறியது. மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் தகரம் சிதறி மேலே பட்டதால் நியாமத்துல்லா (வயது 47) என்பவர் உயிரிழந்தார். பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி.அருண் கபிலன் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார். காவல் நிலையத்தில் பழைய பொருட்களை எரித்தபோது விபத்து நடந்துள்ளது. காயமடைந்த பரத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story