கொரோனாவுக்கு சென்னையில் ஒருவர் பலி


கொரோனாவுக்கு சென்னையில் ஒருவர் பலி
x

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை,

கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்த திரிபு காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் 178 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அவர், கடந்த டிசம்பர் 31-ந்தேதி முதல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story