மராட்டிய முதல்-மந்திரியின் பெயரில் தோட்டம் திறக்க எதிர்ப்பு - திறப்பு விழா ரத்து


மராட்டிய முதல்-மந்திரியின் பெயரில் தோட்டம் திறக்க எதிர்ப்பு - திறப்பு விழா ரத்து
x

தோட்டத்திற்கு முதல்-மந்திரியின் பெயரை வைக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தோட்டத்திற்கு அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தோட்டத்தின் திறப்பு விழா விரையில் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், தோட்டத்திற்கு முதல்-மந்திரியின் பெயரை வைக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து சமூக ஆர்வலர் வினிதா தேஷ்முக் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் பொது தோட்டங்களுக்கு தேசிய தலைவர்கள் அல்லது சுற்றுச்சூழல் அறிஞர்களின் பெயர்களை வைப்பதே வழக்கம் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து புனே மாநகராட்சி தோட்டத்திற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் திகேவின் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story