ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
மணிப்பூர் மாநில சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் மணிகண்டன், ஏழுமலை, சுமதி, பாலையா, அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் ராமன் கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story