அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது - ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"அதிமுக தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓபிஎஸ் தரப்பை கோஷ்டி என்று தான் சொல்வேன். அது கட்சியே கிடையாது.
அதிமுகவின் கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக்கூடாது. சரித்திரத்தை படைக்கும் வகையில் அதிமுக மாநாடு நடைபெற்றுள்ளது. திமுக உட்பட எந்த கட்சியாலும் அதிமுக நடத்தியது போன்ற மாநாட்டை நடத்த முடியாது." இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story