ஆரஞ்சு அலர்ட் - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்


ஆரஞ்சு அலர்ட் -  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
x

கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது

சென்னை,

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன், இருக்க வேண்டும் எனவும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

1 More update

Next Story