சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே உடனடி பணி: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே உடனடி பணி:  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணி என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

கூடுதலாக, சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு, இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இந்தியா முழுவதும் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்த பல ஆக்கபூர்வமான விவாதங்களை வளர்த்துள்ளது.

எங்கள் நிகழ்ச்சி நிரலில் பல விஷயங்கள் இருந்தாலும், பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூக நீதியை நிலைநாட்ட நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணியாகும்.

இதை அடைய நாம் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story