மகாசிவராத்திரியை முன்னிட்டு 41 அடி உயர ராஜலிங்கத்துக்கு பாலாபிஷேகம்


மகாசிவராத்திரியை முன்னிட்டு 41 அடி உயர ராஜலிங்கத்துக்கு பாலாபிஷேகம்
x

மகாசிவராத்திரியை முன்னிட்டு 41 அடி உயர ராஜலிங்கத்துக்கு பாலாபிஷேகம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொம்மி அம்பாள் சமேத முதிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மகாசிவராத்திரியை முன்னிட்டு 41 அடி உயர ராஜலிங்கத்துக்கு கிரேன் மூலம் 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மூலவருக்கு விடிய, விடிய நான்கு கால பூஜை, பால், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. மேலும் கோவில் வளாகங்களில் தேவார இன்னிசை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, பள்ளி மாணவிகளைக் கொண்டு பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Next Story