பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும் - பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்


பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும் - பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்
x

பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லை,

நெல்லை கால்வாய் தூர்வாரும் பணியை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பா.ஜ.க துணை தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் பருவ காலங்களில் மழை பெய்தாலே அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள கால்வாய்களில் மழை நேரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி ஊருக்குள் புகுந்துவிடுவதை தடுக்க ரூ.68.21 லட்சம் மதிப்பில் கால்வாய் தூர்வரப்பட்டு வருகிறது.

சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார்குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும்.

பிரதமர் தமிழில் பேசினால் ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். வைகோ இப்படி பேசுவது தேவையில்லாத விஷயம். இந்தியை திணிப்போம் என மத்திய அரசு எங்கும் இதுவரை சொல்லவில்லை. இந்தியை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.

கட்டமைப்பு வசதிகளை கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சி அரசு. தங்க நாற்கர சாலை திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்த கட்டமைப்பு மேம்பாட்டு வசதியும் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை. பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும். அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story