சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்ததால் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
பயணிகள் குவிந்தனர்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வேலைக்காக வந்துள்ள தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஆயுதப்பூஜை, விஜயதசமி என்று தொடர் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று ரெயில் நிலையத்தில் குவிந்தனர். வழக்கத்தை விட நேற்று பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததது. கூட்டத்தை கட்டுப்படுத்த ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
கூட்டம் அதிக அளவில் இருந்தது
இதேபோல் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் ஏராளமானோர் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்து இருந்தனர்.மேலும் தஞ்சை வழியாக சென்ற ரெயில்களிலும் மக்கள் அதிகஅளவில் பயணம் செய்து சொந்த ஊருக்கு சென்றனர்.தொடர் விடுமுறையை யொட்டி மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்த காரணத்தினால் தஞ்சை புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.