தடை செய்யப்பட்ட பொருட்களை நீலகிரிக்கு கொண்டு வந்த பயணிகள்... அபராதம் விதித்த அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
குறைந்த அளவிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அதிக அபராதம் விதித்ததாக கூறி, அதிகாரிகளிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுடன் வந்த வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோடை விடுமுறையை ஒட்டி, கேரளா, கர்நடகாவில் இருந்து வந்த நீலகிரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை, கூடலூர் பகுதியில் நகராட்சி துறையினர் ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால், அபராதம் விதித்தனர்.
அப்போது, குறைந்த அளவிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அதிக அபராதம் விதித்ததாக கூறி, அதிகாரிகளிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story