காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்றவர்களுக்கு அபராதம்


காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்றவர்களுக்கு அபராதம்
x

காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் சிலர் நாய்களுடன் வேட்டையாடுவதாக வன பாதுகாவலர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வன பாதுகாப்புபடை ரேஞ்சர் கார்த்தி மற்றும் வனவர் செந்தில் ராகவன் தலைமையில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியில் நாய்களுடன் வேட்டையாடுவதற்காக வந்த அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது42), சுரேஷ் (33), கார்த்திக் குமார் (22), அடைக்கலம் (32), விக்னேஷ் (29) ஆகியோரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது முயல் மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் பிடித்து வத்திராயிருப்பு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.



Next Story