போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பணப்பலன்களை உடனே வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி கிளைகள் சார்பில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு விழுப்புரம் மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடலூர் மண்டல தலைவர் கண்ணுசாமி, திருவண்ணாமலை மண்டல தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுச்செயலாளர்கள் விழுப்புரம் ராமமூர்த்தி, கடலூர் பாஸ்கரன், திருவண்ணாமலை லட்சுமிநாராயணன், புதுச்சேரி கிளை தமிழ்வாணன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 96 மாதங்களாக வழங்காமல் உள்ள டி.ஏ. உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், 2022 டிசம்பர் முதல் ஓய்வு கால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story