சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:48 PM GMT)

மாங்கோடு ஊராட்சியில் சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

குமரி-கேரள எல்லைப் பகுதியான மாங்கோடு ஊராட்சி மலையோர பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த ஊராட்சியில் ஒரு சாலையை 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதையடுத்த மேல்புறம் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து சாலையில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கப்பட்டு மேம்பாடு பணி செய்யப்பட்டது. தற்போது இந்த சாலையை ஒரு பிரிவினர் அடைத்தனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்க காலதாமம் ஆவதை கண்டித்தும், சாலை அடைக்கப்பட்டதை கண்டித்தும் மாங்கோடு ஊராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாங்கோடு ஊராட்சி காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். கடையால் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சத்யராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மேற்புறம் ஊராட்சி ஒன்றிய தலைவி ஞானசவுந்தரி மற்றும் மாவட்ட வட்டார நிர்வாகிகள் பேசினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலைைய திறக்க கோரி கோஷம் எழுப்பினர்.


Next Story