ரூ.926 கோடி கடன் பாக்கி: மீண்டும் அந்த "இருண்ட காலம்" வந்துவிடுமோ? மக்கள் நீதி மய்யம் அறிக்கை


ரூ.926 கோடி கடன் பாக்கி: மீண்டும் அந்த இருண்ட காலம் வந்துவிடுமோ? மக்கள் நீதி மய்யம் அறிக்கை
x

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.926 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளது.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.926 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால், மின்சாரம் வாங்க தமிழகத்துக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மாநிலத்தின் மின்சார தேவையில் 3-ல் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்கிறது.

பெருமளவு மின்சாரம் வெளிச்சந்தையில் இருந்துதான் வாங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடியாவிட்டால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை, தொழிற்துறையானது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறைந்த தொகையே பாக்கி உள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்தாலும், அந்த தொகையினை உடனடியாக செலுத்தி தடையை விலக்கச்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அந்த "இருண்ட காலம்" வந்துவிடுமோ என்ற தமிழக மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story