ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x

கோப்புப்படம்

ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தொடர்பாக ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

சென்னை.

சென்னை பெரியார் திடலில் கடந்த மாதம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பேசினார். அப்போது அவர் இந்து மதம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "ஆ.ராசாவின் பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ஆ.ராசா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story