பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது


பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது
x

தொடர் பெட்ரோல் குண்டு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரத்தில் மத்திய மந்திரி பானு பிரதாப்சிங் வர்மா தெரிவித்தார்.

ராமநாதபுரம்


தொடர் பெட்ரோல் குண்டு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரத்தில் மத்திய மந்திரி பானு பிரதாப்சிங் வர்மா தெரிவித்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் பாரதிராஜா தலைமையில் நடந்தது. தேசிய கயிறு வாரிய தலைவர் குப்புராமு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய சிறுகுறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப்சிங் வர்மா கலந்து கொண்டு பேசினார்.

கூட்ட முடிவில் மத்திய மந்திரி பானுபிரதாப் சிங் வர்மா பேட்டியின்போது கூறியதாவது:-

தமிழகத்தில் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுபற்றி கட்சியின் தலைமைக்கு தகவல் கிடைத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு முகமை சோதனை என்பது தமிழகம், கேரளா மாநிலங்களில் மட்டும் நடக்கவில்லை. நாடு முழுவதும் அந்த அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தேசத்துக்கு விரோதமாக யார் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story