கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: மேலும் ஒருவர் கைது


கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: மேலும் ஒருவர் கைது
x

பாஜக அலுவலகத்தில் குண்டு வீச்சு பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை,

குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறி இருந்தார்.

இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தற்போது சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பிஎப்ஐ துடியலூர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளார். 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ளவர்களை போலீஸ் தேடி வருகிறது" என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story