கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலியாக சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை
கோவையில் பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சென்டிரல் ரெயில் நிலையத்தின் 6-வது நுழைவு வாயில் மற்றும் 8, 9-வது நடைமேடைகளில் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான ரெயில்வே போலீசார் மோப்பநாய் குழுவினருடன் இணைந்து திடீர் சோதனையிட்டனர். அதில் ரெயில் பயணிகளின் உடைமைகளை மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story