காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது


காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
x

காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தை அடுத்த புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. இவரது மனைவி லதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ரஜினி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். லதா தனியார் நகை கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது முதல் மகள் கல்லூரியிலும், 3-வது மகள் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 2-வது மகளான கனிஷியா(வயது 17) காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் கனிஷியா ஆங்கில பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் பெற்றோரை அழைத்து வரும்படி தெரிவித்தனர்.

பணிமுடித்து வீட்டுக்கு வந்த லதா, வீடு உள்பக்கம் தாளிட்டிருந்ததால் தட்டி பார்த்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினருடன் கதவை திறந்து பாரத்தபோது கனிஷியா மின்விசிறியில் தூக்குப்போட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து கனிஷியாவை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாணவி கனிஷியா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

பள்ளியில் ஆசிரியை திட்டி விட்டார்கள். நான் எந்த தவறும் செய்யாமல் இருக்கும்போது எல்லாம் என்னை திட்டுகிறார்கள். சின்ன, சின்ன விஷயங்களுக்கு திட்டுகின்றனர்.

தந்தையை அழைத்து வரும்படி ஆசிரியை கூறியுள்ளார். எப்பவும் நாள் நியாயமாக இருந்தாலும் அநியாயம்தான் நடக்கிறது

கடவுளே இல்லை. எனக்கு ஒரு முறை கூட நல்லது நடக்க வில்லை. தேர்வில் பிட் அடித்தவர்கள் மட்டும்தான் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள். எப்பவும் படித்து எழுதும் எனக்கு ஒரு முறை கூட குட் போட்டதில்லை. ஒரு முறை கூட குட் வாங்கியது இல்லை. லாரி வண்டியின் மீது சைக்கிளை விட முயன்றும் ஒரு முறை கூட என்னால் சாக முடியவில்லை எனக்கு உயிருடன் இருக்க பிடிக்க வில்லை.

அம்மா... என்னை நல்ல ஆங்கில பள்ளியில் சேர்த்து இருந்தால் எனக்கும் மற்றவர்கள் போல் ஆங்கிலம் வந்திருக்கும் அல்லவா எல்லோர் முன்பும் இது போல் கேட்டு இருப்பார்களா? எனக்கு ஆங்கிலம் வராதா? எனக்கு சத்தியமா வாழ பிடிக்கவில்லை. சின்ன வயதில் இருந்து ஆங்கிலம் வந்து இருந்தால் இவ்வளவு கஷ்டபடாமல் இருந்திருப்பேன். வரவர என்னை எனக்கே பிடிக்கவில்லை. அம்மா என்னை ஏன் ஆங்கில பள்ளியில் சேர்க்கவில்லை. நான் சந்தோஷமாக இல்லை. அக்காள், தங்கை நன்றாக படிக்கிறார்கள். என்னால்தான் படிக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் எழுதி இருந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story