'மணிப்பூர் விவகாரத்திற்கு பொறுப்பேற்று பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்' - திருமாவளவன் வலியுறுத்தல்


மணிப்பூர் விவகாரத்திற்கு பொறுப்பேற்று பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
x

மணிப்பூர் முதல்-மந்திரி கைது செய்யப்பட்டு குற்ற வழக்கில் சிறைப்படுத்தப்பட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை,

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி நதியில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மணிப்பூர் முதல்-மந்திரி கைது செய்யப்பட்டு குற்ற வழக்கில் சிறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மணிப்பூர் கொடூரம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அங்குள்ள பா.ஜ.க. அரசு இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் மணிப்பூர் விவகாரத்திற்கு பொறுப்பேற்று பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story