திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை எதிரொலிபாளையம் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை


திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை எதிரொலிபாளையம் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 12 Feb 2023 7:00 PM GMT (Updated: 2023-02-13T00:30:33+05:30)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் எதிரொலியாக தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி வழியாக செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்களை தொப்பூர் போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே செல்ல அனுமதித்தனர்.

மேலும் இந்த சுங்கச்சாவடி வழியாக வந்து செல்லும் வாகனங்கள் எங்கிருந்து எங்கு செல்கிறது என்பது குறித்த ஆவணங்களை சரிபார்த்த பின்னரே வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story