தாம்பரம்: சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
தாம்பரம் அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செங்கல்பட்டு
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த சிறுமி அவருடன் பழகி வந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஆஷிக் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகி சில நாட்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆஷிக்கை இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Related Tags :
Next Story