Normal
ஆட்டோ, ஆட்டோவாக அண்ணாமலையை தேடிய போலீசார் - சென்னையில் பரபரப்பு
அண்ணாமலை ஆட்டோவில் ஏறி கோட்டையை முற்றுகையிட செல்கிறார் என்ற தவறான தகவல் பரவியது.
சென்னை,
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பாஜக வினர் சென்னையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
இதையடுத்து போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து அண்ணாமலை தனது காருக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அருகில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் ஏறி, தனது கார் இருக்கும் பகுதிக்கு சென்று, அங்கிருந்து கமலாலயம் சென்றார்.
ஆனால், அவர் ஆட்டோவில் ஏறி கோட்டையை முற்றுகையிட செல்கிறார் என்ற தவறான தகவல் பரவியது. இதையடுத்து போலீசார் நேப்பியர் பாலம் அருகே தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால், அண்ணாமலை கோட்டையை நோக்கி செல்கிறார் என்பது தவறான தகவல் என்ற உண்மை தெரிய வந்ததால், இந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story