ஓடும் பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் - போக்சோ சட்டத்தில் கைது


ஓடும் பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் - போக்சோ சட்டத்தில் கைது
x

ஓடும் பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தன்னுடைய தாயுடன் தாம்பரத்தில் இருந்து அரசு பஸ்சில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 3 பேர் அமரும் இருக்கையில் தாய், மகள் இருவரும் அமர்ந்திருந்தனர். சிறுமிக்கு அருகில் முதுகரை கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 35) அமர்ந்திருந்தார். ஓடும் பஸ்சில் சதீஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதை பஸ்சில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கவனித்து சிறுமியின் தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாயார் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் அவரை தாக்கி உள்ளனர். பஸ் மதுராந்தகத்தை அடையும் போது அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சதீஷ் மதுராந்தகத்தை அடுத்த முதுகரை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் சென்னை பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் சதீஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story