சென்னையில் பணியாற்றும் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது


சென்னையில் பணியாற்றும் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 11 April 2024 5:26 AM GMT (Updated: 11 April 2024 5:33 AM GMT)

போலீசார் 3 நாட்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் சென்னை மாநகர போலீசார் அனைவரும் தபால் வாக்கு செலுத்த சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (சனிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போலீசார் தபால் வாக்கு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னையில் போலீசார் தற்போது தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை பேசின்பிரிட்ஜ் ரோட்டில் உள்ள வடசென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், சென்னை அடையாறு, முத்துலட்சுமி சாலையில் உள்ள தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் மற்றும் சென்னை செனாய் நகர், புல்லா அவென்யூவில் உள்ள மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் போலீசார் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்த அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் தகுந்த ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்கும்படி பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


Next Story