பெரியார் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
பெரியார் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிக்கப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே மின்சார வாரியத்தின் அலுவலகத்தின் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து சிலையின் கீழ் பகுதியில் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தி.மு.க. நகர செயலாளர் செந்தில், அப்துல்லா எம்.பி. உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் அறிவொளி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமையில் இளைஞர்கள் பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல அரசியல் கட்சியினர் சிலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கரு. ராமநாதன், மாநில திராவிடர் கழக இளைஞர் அணி துணை செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.