பொங்கல் பரிசு: ரூபாய் ஆயிரத்துடன் 21 பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்


பொங்கல் பரிசு: ரூபாய் ஆயிரத்துடன் 21 பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
x

கோப்புப்படம்

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூபாய் ஆயிரத்துடன் 21 பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோவும், ரூ.1000-ம் ரொக்கப் பணமும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு, நெய் உட்பட 21 பொருட்கள் கொண்ட பரிசுத் தொகுப்பில் இருந்தன. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் ரூ.1000-த்துடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருள்களுடன், கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story