தந்தையை கொன்று புதைத்த வழக்கில் சரண் அடைந்த மகனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு


தந்தையை கொன்று புதைத்த வழக்கில் சரண் அடைந்த மகனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2022 7:19 AM GMT (Updated: 7 Jun 2022 7:21 AM GMT)

தந்தையை கொன்று புதைத்த வழக்கில் சரண் அடைந்த மகனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை

சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன் (வயது 72). இவரை சொத்து தகராறில் அவருடைய மகன் குணசேகரன் (42) என்பவர் கொலை செய்துவிட்டு, அவரது உடலை டிரம்மில் அடைத்து ராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கத்தில் புதைத்துவிட்டார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை தேடி வந்தனர். இதற்கிடையில் பூந்தமல்லியில் உள்ள கோர்ட்டில் குணசேகரன் சரணடைந்தார்.

இதையடுத்து குணசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி கோர்ட்டில் போலீசார் மனு அளித்திருந்தனர். நேற்று அந்த மனுவை விசாரித்த பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட், குணசேகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், விசாரணை முடிந்து வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் குணசேகரனை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க அழைத்து சென்றனர்.


Next Story