பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு


பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
x

பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் பகுதியில் அடங்கிய மாரம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 60). இவர் பூதூர் என்கிற இடத்தில் உள்ள சென்னை வெளிவட்ட மீஞ்சூர் நெமிலிச்சேரி சாலை அருகே தனது மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். இந்த நிலையில் திடீரென மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மலை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற நிலையில் நகைகளை பிடித்துகொண்டு போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கி விட்டு தங்க நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பூதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story