'மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு


மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
x

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை,

தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி முயற்சி மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் கவர்னர்களை நியமித்து அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.



Next Story