முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
x

இந்த விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சென்னை,

முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் புதிதாக வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இந்த விழாவில், வி.பி.சிங்கின் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய்சிங், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை ஆற்றுகிறார்.


Next Story