மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி


மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
x

பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 22-ம் தேதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக 2 நாள் பயணமாக கடந்த பிப். 27ல் தமிழகம் வந்த மோடி, பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து, கடந்த 4ம் தேதிதான் சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, இந்த ஆண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

ஒரு சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.


Next Story