பிரதமர் மோடி சென்னை வருகை - முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


பிரதமர் மோடி சென்னை வருகை - முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
x

வருகிற 26-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

சென்னை,

அரசு முறைப் பயணமாக வரும் 26-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அப்போது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா என்று அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 17 ஆயிரத்து 471 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவித்தார்.


Next Story