2024-ல் ஹாட்ரிக் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
வளர்ச்சி தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,
4 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து பாஜக தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடி, அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
வளர்ச்சி தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் . ஊழலை ஒழிக்க பாஜகவால் மட்டுமே முடியும். தேர்தல் முடிவுகளை உலகமே உற்று நோக்குகிறது. பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2024-ல் ஹாட்ரிக் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Related Tags :
Next Story