செருப்புக்காக அடித்து கொண்ட கைதிகள்... புழல் சிறையில் நடந்த பரபரப்பு சம்பவம்

கோப்புப்படம்
சென்னை புழல் மத்திய சிறையில் 3 கைதிகள் சேர்ந்து தாக்கியதில், வலது கண் அருகே காயம் ஏற்பட்ட சக கைதிக்கு, 6 தையல்கள் போடப்பட்டது.
சென்னை,
சென்னை புழல் மத்திய சிறையில் எண்ணூரைச் சேர்ந்த கார்த்தி, தீபன் என்கிற ராஜேந்திரன் மற்றும் அயனாவரம் பகுதியை சேர்ந்த யோகராஜ் என்கிற லோகு ஆகியோர் தங்களது அறையில் இருந்தனர். அப்போது, அவர்களின் செருப்பை எடுத்துவிட்டதாகக் கூறி, சக கைதி முகமது ஆமாமை தாக்கினர்.
3 கைதிகள் சேர்ந்து தாக்கியதில், சக கைதிக்கு வலது கண் அருகே காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






