தனியார் நிறுவன ஊழியர் கைது
கவனக்குறைவாக கார் ஓட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்
விழுப்புரம்,
விழுப்புரம் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார், விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த காரில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்றுள்ளார். உடனே பொதுமக்கள் உதவியுடன் அந்த காரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன் (வயது 42) என்பதும், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து கவனக்குறைவாக காரை ஓட்டிச்சென்றதாக வெங்கடேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story